வணக்கம் மாணவச்செல்வங்களே !!!
நம் நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு,நம் நாடு பல தலைவரகளால் இதுவரை ஆளப்பட்டது.
"நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்"
இது சாத்தியமாகுமா ?
இளைஞர்கள் இன்று இந்நதியாவை தன் கையில் ஏந்தி தாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் அரசியல் சூழ்ச்சி நம் கையையும்,வாயையும் கட்டிப்போட்டுவிட்டது.
நாம் தெளிவாகத்தான் இருக்கிறோம்,நம்மை சுற்றியுள்ள சில சூழ்ச்சியாளர்கள் நம்மை தெளிவற்றவர்களாக மாற்றிவிடுகிறார்கள்.
நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி , கட்சிகளே கூடாதென்றார்.
ஆனால் அவரை அடிப்படையாக வைத்தே இன்று நாட்டில் ஒரு கட்சி தோன்ற்விட்டது.
1967-ல் தமிழகம் உட்பட்ட எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த அடியை நினைவூட்டிக்கொள்ளுங்கள்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒரு கட்சியின் அதிகாரத்தை வெறும் இருபதே ஆண்டுகளில் ஆட்டம் காண வைத்து தமது நன்றி கெட்டத்தனத்தைபோராட்டத்திற்கு தலைமை தாங்கிய கட்சி என்னும் அதன் பேருரு சாமான்ய இந்திய வாக்காளர்களின் முன்பு சிறுத்துப் போன விந்தை நடந்தது.
ஏழைகளின் பாதுாவலர் எனும் படிமத்தோடு அவர்களது நலன்களை பாதுகாப்பதெற்கெனச் சொல்லிக் கொண்டு ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயன்ற இந்திராவுக்கு அதே சாமான்ய இந்திய வாக்காளர்கள் மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுத்தார்கள்.
சில ஆட்சிக்காலங்களாக தமிழகத்தின் அசைக்க முடியாத சக்திகளாக இருந்து வரும் திமுகவும், அதிமுகவும் கூட வாக்காளர்களிடமிருந்து அதிர்ச்சியளிக்கத்தக்க பல பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது.
இடதுசாரிகள் எனும் மிகப்பெரிய கட்சி மேற்கு வங்கத்தில் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக தனது ஆட்சியை விட்டுக்கொடுக்காமல் வந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி என்னும் சாமான்யப் பெண்மணியிடம் தோற்றுப்போன கதைதான் அது.
நம் ஜனநாயக வாக்காளர்கள் உண்மையில் ஏமாறுபவர்களி்தான்,நம் நாட்டு மக்கள் ஏமாறுபவர்கள் என்று தெரிந்த சில சதிகாரர்களின் திட்டம்தான் இது.
No comments:
Post a Comment