Monday, 13 October 2014

SONG LINES FOR-என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,

என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,
கணகள் மயங்கி கொஞ்சிப் பறித்தாய் கனவில் ஒரு சத்தம்,
நேற்றுப் பார்த்தேன் நிலா முகம்,தோற்றுப் போனேன் ஏதோ சுகம்,
ஏ....... தென்றல் பெண்ணே,இது காதல் தானடி,
உன் கண்களோடு  இனி மோதல்தானடி,
என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,
கணகள் மயங்கி கொஞ்சிப் பறித்தாய் கனவில் ஒரு சத்தம்,
காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது,
கண்களால் சுவாசிக்க கற்றுத்தந்தது,
பூமியே சுழல்வதாய் பள்ளிகூடம் சொன்னது,
இன்றுதான் என் மனம் ஏற்றுக்கொண்டது,
ஓ.....ஓ  காதலி என் தலையனை நீ என நினைத்துக் கொள்வேன்,
அடி நான் தூங்கினால்  அதை தினம் என் மார்பினில் அனைத்துக் கொள்வேன்,
கோடைக்கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்,
என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,
கணகள் மயங்கி கொஞ்சிப் பறித்தாய் கனவில் ஒரு சத்தம்,
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்,
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்,
கோவிலின் வாசலில் உன் செறுப்பைத் தேடிவேன்,
கண்டதும் நொடியிலே பக்தனாகுவேன்,
ஓ....ஓ காதலி என் நழுவிய கை உன்னை எடுப்பது போல்,
சாலை ஓரமாய்  நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்,
உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாசக் காற்று தேவையா,
என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,
கணகள் மயங்கி கொஞ்சிப் பறித்தாய் கனவில் ஒரு சத்தம்,

No comments:

Post a Comment